தொன் தமிழகத்தில் வளமாக; போர்
களமாக மூவேந்தரின் வணிகத்
தளமாக விளங்கி ஆநிலையப்பர் திருத்
தலவரலாற்று புகழும் ஆறுநாட்டார்மலை கல்வெட்டின்சேர மேன்மைகளுமாக; சோழர் தேசத்தார் ஆட்சியோடு கருவூல மாயின்
காலத்தின் மாற்றத்தின்கண் மருவிய
ஆற்றுப்படுத்த இயலாத கடுங் கோபத்தோடு
ஆர்ப்பரித் தோடும் ஆற்றல்மிகுஆன்
பொருனையும் குமரித் தொடங்கி தமிழகத்தின் நுழைவைத் தொட்டு வங்ககடலில்
கலந்தோடும் காவேரி யோடு நற்றமிழ்
இலக்கியநூல் வாயிலின் வழியே
பெருமைமிகு சிறப்பின் வஞ்சி; ஊரே
இன்றையகால இந்தியாவின் பொருளாதார ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும்
புகழின் ஊரும் பேருந்துகூடும் கொசு வலையும் துணிகளின் துணிவோடு தொழில்
நகரான நெசவு தலைநகராகியும் கன்னித் தமிழின் புகழின்கண் கொங்கு தமிழின்
தனித் தொனியின் நடையின் மக்களாக
வந்தாரை அன்பின் கரத்தினால்
வாழ வைக்கும் வஞ்சி மாநகரமே
வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அன்பின் மிகுதியால் இணைவோம்.